வரியை ரத்து செய்த முதல்வர்: வெளியானது ‘நச்’ அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

வரியை ரத்து செய்த முதல்வர்: வெளியானது ‘நச்’ அறிவிப்பு!

வரியை ரத்து செய்த முதல்வர்: வெளியானது ‘நச்’ அறிவிப்பு!

பஞ்சு மீதான 1 சதவீதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும் எனவும் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
“நெசவாளர் மற்றும் தொழில் முனைவோர் சிறு, குறு தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு.

இந்திய நாட்டில் துணிச் சந்தையிடுதலில் மூன்றில் ஒரு பங்கு தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 1570 நூற்பாலைகள் உள்ளது. இதில் 45 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 95% பஞ்சானது வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 1987 சட்டம் 24 பிரிவின்படி பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு அதற்கு 1 சதவீதம் சந்தையில் நுழைவு வரி வசூல் செய்வதால் போக்குவரத்து நெருக்கடி சிறு,குறு தொழிலாளர்களுக்கு பெறும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.நெசவாளர் மற்றும் தொழில் முனைவர்கள் இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைத்து ரத்து செய்யக்கோரினர். அதன் அடிப்படையில் பஞ்சு மீதான ஒரு சதவீத சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்கள் பயனடைவார்கள். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான திருத்தம் கொண்டு வரப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad