பள்ளிகளில் பாலியல் சீண்டல்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

பள்ளிகளில் பாலியல் சீண்டல்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

பள்ளிகளில் பாலியல் சீண்டல்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

பள்ளிகளில் மாணவிகள் அளிக்கும் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாணக்கர்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுக்காக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கட்டணம் இல்லா தொலைபேசி ,மின்னஞ்சல் வசதி கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளி இயக்குனர் வளாகத்தில் அமைக்கப்படும் , ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

“பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்புக்கு பெண் எஸ்.பி அளவிலான போலீஸ் அதிகாரி, சமூக பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் நிபுணர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல் போன்ற பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும். மேற்கண்ட உத்தரவுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad