எங்களுக்கு தடை, அவருக்கு அனுமதியா? சர்ச்சையில் உதயநிதி ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

எங்களுக்கு தடை, அவருக்கு அனுமதியா? சர்ச்சையில் உதயநிதி ஸ்டாலின்!

எங்களுக்கு தடை, அவருக்கு அனுமதியா? சர்ச்சையில் உதயநிதி ஸ்டாலின்!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் 15ஆம் தேதி வரை பல்வேறு சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் உத்தரவில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது விழா கொண்டாட அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும்,

மராத்தான் போட்டிக்கு அனுமதி

நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெறவுள்ள மராத்தான் போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்கப்படாத நிலையில், மக்கள் அதிக அளவில் பங்கேற்கும் மராத்தான் போட்டிக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்று கேள்வ ி எழுப்பப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் புகார் மனு

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு தலைவர் நரேன் பாபு மற்றும் நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் திருப்பூரில் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் வரும் 5ஆம் தேதி மராத்தான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad