ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு ஏன் வரவில்லை? திருமாவளவன் பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு ஏன் வரவில்லை? திருமாவளவன் பதில்!

ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு ஏன் வரவில்லை? திருமாவளவன் பதில்!

தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று ஆளுநர் பதவியேற்பு விழா சென்னை ராஜ்பவனில் இன்று நடைபெற்றது. ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


எனினும், இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாததால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் இந்த ஆளுநரை நியமிப்பதில் மாற்றுக்கருத்து இருக்கிறது. இவர் மீது கடுமையான விமர்சனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன். எனவே பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad