போலி பத்திரப்பதிவு: புதிய மசோதா நிறைவேற்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

போலி பத்திரப்பதிவு: புதிய மசோதா நிறைவேற்றம்!

போலி பத்திரப்பதிவு: புதிய மசோதா நிறைவேற்றம்!

போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால் சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றங்களிடம் கோரலாம். போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே இருந்தது.

இந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில், போலி பத்திரப்பதிவை பத்திரப்பதிவுத் தலைவரே ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார்.

இந்த மசோதாவானது உடனடியாக ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மோசடி பத்திரங்களை இனி பதிவுத்துறை தலைவரே ரத்து செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு நடவடிக்கைகள் நடக்கின்றன. இதில் பல இடங்களில், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் வாயிலாக மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad