தினமும் கட்டாயம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தால் நம்முடைய மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும்...
உடற்பயிற்சி என்பது ஒரு ஆரோக்கியமான பழக்கமாகும். அனைவரும் தினமும் குறைந்தது 50 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கின்றது. உடற் பயிற்சியில் எளிய உடற்பயிற்சிகள் மற்றும் வலிமையான உடற்பயிற்சிகள் என இரண்டு வகை உண்டு. வீடுகளில் சாதரணமாக உடற்பயிற்சி செய்பவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள் இந்த எளிய வகை உடற்பயிற்சிகளை செய்கின்றனர். இவை
லேசான உடற்பயிற்சியாகும்.
இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றோர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இவை கடினமான உடற்பயிற்சிகளாக உள்ளன. எடை தூக்குதல் போன்ற பயிற்சிகள் இதில் அடங்கும். இதன் மூலம் அவர்கள் வலிமையான தேகத்தை பெற முயற்சி செய்கின்றனர். எப்படி இருந்தாலும் உடற்பயிற்சியானது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை செய்கிறது.
நாம் சுறு சுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உடற்பயிற்சி உதவுகிறது. மேலும் இது மன அரோக்கியத்திற்கும் உதவுகிறது. ஏனெனில் இந்த சமயத்தில் உடலானது டோபமைன் என்னும்
நல்ல ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. எனவே உடற்பயிற்சி மூளைக்கு உதவுகிறது. ஆனால் உடற்பயிற்சியில் சில தீமைகளும் உள்ளது.
மூளைக்குப் பயிற்சி
அதிகமான உடற்பயிற்சியானது உடலில் அதிகமான வலி, எலும்புகளில் தேய்மானம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். அதே போல இது மூளையிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சரியான உடற்பயிற்சி மூளைக்கு பல நன்மைகளை அளிக்கிறது தெரியுமா? உடற்பயிற்சியால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றியே அதிகமானோர் அறிந்து வைத்திருக்கின்றனர். அது மூளைக்கு அளிக்கும் நன்மை குறித்து குறைவான மக்களே அறிந்து வைத்துள்ளனர். எனவே உடற்பயிற்சி மூளைக்கு செய்யும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
No comments:
Post a Comment