Black Chickpea :தினமும் அரை கப் கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட்டா உடம்புல என்ன மாற்றம் நடக்கு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிசாப்பிடும் கருப்பு கொண்டைக்கடலை சுண்டலாக, கிரேவியாக, குருமாவாக சாப்பிடுகிறோம். இவை சூப் அல்லது சாலட்களிலும் சேர்க்க படுகின்றது. சிற்றுண்டியாக பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு கொண்டைக்கடலை அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்துக்கு நன்மை
தரகூடியவை. இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
கருப்பு கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்து அதிகம். குறைந்த கொழுப்பு, அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் உடலுக்கு தேவை. இந்த பருப்பு வகைகளில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி எடுத்துகொள்வது
ஐந்து பகுதிகளான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு சமம். கருப்பு கொண்டைக்கடலை 100 கிராம் அளவில்
கலோரிகள் - 164
சோடியம் 24 எம்.ஜி
மொத்த கொழுப்பு - 6.04 கிராம்
பொட்டாசியம் -718 மி.கிராம்
மொத்த கார்போஹைட்ரேட் -27 கிராம்
பாலி அன்சாச்சுரேட்டட் -2.731 கிராம்
உணவுநார்ச்சத்து -12.2 கிராம்
மோனோசாச்சுரேட்டட் -1.377 கிராம்
சர்க்கரை -10.70 கிராம்
டிரான்ஸ் -0 கிராம்
புரதம் -20.47 கிராம்
கொழுப்பு - 0 மி.கிராம்
வைட்டமின் ஏ- 1%
வைட்டமின் சி - 2%
கால்சியம் - 5%
இரும்பு -16%
தினசரி மதிப்புகள் - 2000 கலோரி உணவு அடிப்படையாக கொண்டவை. இதன் கலோரி மதிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
No comments:
Post a Comment