West Nail Virus : அடுத்த உயிர்க்கொல்லி நோய் கொசுவால் பரவலாம், அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள்!
வைரஸ் தாக்கம் இன்னும் முடிவடையவில்லை என்ற பீதி மக்கள் மனதில் நின்று கொண்டே இருப்பதை நிரூபித்துள்ளது வெஸ்ட் நைல் வைரஸ். ரஷ்யாவில் தற்போது இந்த நோய் வேகமெடுத்து வருவதாக எச்சரித்துள்ளது.
ரஷ்யாவில் தற்போது இளவேனில் காலம் நிலவுகிறது. இதமான இந்த சூழலில் கதகதப்பான பருவத்தில் இவை வேகமாக பரவலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வெஸ்ட்
நைல் வைரஸ் என்றால் என்ன, எப்படி பரவுகிறது, அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தவிர்க்கும் முறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மேற்கு நைல் வைரஸ் என்பது கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் நோய். இந்த வைரஸ் பறவைகளிலிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. அதே நேரம் இது மனிதர்களிடமிருந்து மனிதர்களை தாக்குவதில்லை.
இந்த வைரஸ் உகாண்டா
நாட்டின் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தான் இந்த பெயரிலேயே இவை அழைக்கப்படுகிறது. 1953 ஆம் ஆண்டு நைல் டெல்டா பகுதியில் உள்ள பறவைகளில் ( காகங்கள் மற்றும் கொலும்பிஃபார்ம் ) அடையாளம் காணப்பட்டது.
No comments:
Post a Comment