பதவியேற்ற உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த முதல் காரியம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

பதவியேற்ற உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த முதல் காரியம்!

பதவியேற்ற உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த முதல் காரியம்!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியவர். கடந்த 2012ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் பிரதமர் அலுவலகத்தில் இணை புலனாய்வு குழுவின் தலைவராக செயல்பட்டார். 2018ஆம் ஆண்டு அக்டோபரில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2019 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் கடந்த 15ஆம் தேதி வரை நாகாலாந்து ஆளுநராக பொறுப்பு வகித்தார்.

புதிய ஆளுநர் பதவியேற்பு

இந்த சூழலில் தான் தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சென்னையில் உள்ள ராஜ்பவனில் எளிமையாக நடந்த விழாவில் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜி.கே.வாசன், கே.பி.முனுசாமி,


பத்திரிகை அனுபவம்

வேலுமணி, வைத்திலிங்கம், தங்கமணி, தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு பணியாற்றுவதில் பெரிதும் ஆர்வமாக இருக்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் எனது பணி அமையும். எனக்கு சிறிது பத்திரிகை அனுபவமும் உள்ளது. அதன்மூலம் பத்திரிகை பணி, பத்திரிகையாளர்கள் என்ன கருதுகிறார்கள் என்று அறிய முடியும். தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன.

மாமல்லபுரத்திற்கு பயணம்

கொரோனா பெருந்தொற்றை மிகவும் சிறப்பாகவே கையாண்டு இருக்கிறது. வரும் நாட்களில் அழகானதாகவும், நேர்மறையாகவும் அமைந்திடும் வகையில் எனது முயற்சிகள் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயற்சிப்பேன். தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்று கூறினார். பதவியேற்றதை அடுத்து முதல் வேலையாக நேற்று மாலை 4.30 மணியளவில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மாமல்லபுரத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad