ஹெச். ராஜாவை கண்டிக்காமல் மீடியாக்களுக்கு ஐஸ் வைக்கும் பாஜக அண்ணாமலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

ஹெச். ராஜாவை கண்டிக்காமல் மீடியாக்களுக்கு ஐஸ் வைக்கும் பாஜக அண்ணாமலை!

ஹெச். ராஜாவை கண்டிக்காமல் மீடியாக்களுக்கு ஐஸ் வைக்கும் பாஜக அண்ணாமலை!

சென்னையில் சில தினங்களுக்கு ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் 'ப்ரிவியூ ஷோ நடைபெற்றது. இந்த சினிமாவை கண்டுகளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் முன்னிலையிலேயே ஊடகங்களை தரகுறைவாக தீட்டித் தீர்த்தார்.



ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டங்களை தெரிிவித்து வருகின்றன. ராஜாவை ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது.

பொதுவெளியில் ஊடகங்கள் குறித்து இவ்வளவு மோசமாக பேசும் ஹெச்.ராஜாவை, பாஜக மேலிடம் கண்டிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஊடகங்களை சமாதானப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு ஐஸ் வைக்கும் விதத்திலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு.



நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி,மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது. நன்றி… வணக்கம்! ' என்று தமது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தனது இந்த நீட்ட பதிவில், ஊடகங்களை மோசமாக பேசிய ஹெச்.ராஜாவை அண்ணாமலை எந்தவொரு இடத்திலும் கண்டிக்கவில்லை என்பதும், பாஜக ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad