பள்ளிக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை; வெளியான முக்கிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

பள்ளிக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை; வெளியான முக்கிய அறிவிப்பு!

பள்ளிக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை; வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதும் குறைந்திருப்பதால் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்கள் வீதம் சுழற்சி முறையில் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது சற்றே கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாததால் மாநில அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. பல மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு சற்று ஆறுதலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சக மாணவிகளுக்கு நடத்திய பரிசோதனையில் மொத்தம் 7 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உடனே சம்பந்தப்பட்ட பள்ளி மூடப்பட்டது. இன்று முதல் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad