விவேக் மரணத்தில் சர்ச்சை: வெளியான புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

விவேக் மரணத்தில் சர்ச்சை: வெளியான புதிய உத்தரவு!

விவேக் மரணத்தில் சர்ச்சை: வெளியான புதிய உத்தரவு!

நடிகர் விவேக் மரணம் குறித்து எட்டு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் திரைப்படங்களிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி மக்களிடையே நல்ல கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பதை தனது பணியின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டவர்.

விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் விவேக் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தடுப்பூசி செலுத்திய அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டு விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என கூறப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் விவேக் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு மரணமடைந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து விவேக் மரணம் குறித்து எட்டு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad