"உடல் அழுகி போகட்டும்!" - முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தூக்கிலிட்ட தலிபான்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

"உடல் அழுகி போகட்டும்!" - முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தூக்கிலிட்ட தலிபான்கள்!

"உடல் அழுகி போகட்டும்!" - முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தூக்கிலிட்ட தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவின் சகோதரர் ரோஹுல்லா அஸிஸியை தலிபான்கள் தூக்கிலிட்டு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதை அடுத்து தலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசை தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த அரசு நாளை பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணத்தில், தலிபான்களுக்கு எதிராகப் போராடியவர், ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவின் சகோதரர் ரோஹுல்லா அஸிஸி. இவரை, பஞ்ச்ஷிர் மாகாணத்தை தலிபான்கள் அண்மையில் கைப்பற்றிய போது, தூக்கிலிட்டு கொலை செய்தததாக, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளனர்.

அவரை உடலை அடக்கம் செய்ய தர மறுத்த தலிபான்கள், ரோஹுல்லா அஸிஸியின் உடல் அழுகி போகட்டும் என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பஞ்ச்ஷிர் மாகாணத்தில் ஏற்பட்ட போரில் ரோஹுல்லா அஸிஸி கொல்லப்பட்டதாக தலிபான்களின் ஒரு தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad