செல்போனை முழுங்கிய நபர்: அதிர்ச்சி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

செல்போனை முழுங்கிய நபர்: அதிர்ச்சி தகவல்!

செல்போனை முழுங்கிய நபர்: அதிர்ச்சி தகவல்!செல்போனை விழுங்கிய நபர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து செல்போன் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொசோவோ நாட்டின் பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர், பழைய
நோக்கியோ 3310 என்ற மாடல் செல்போனை வைத்து இருந்தார். இவர் அந்த செல்போனை வாயின் அருகே வைத்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த செல்போனை விழுங்கியுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற அவர் செல்போனை விழுங்கிய தகவலை தெரிவித்துள்ளார். உடனே மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், வயிற்றில் செல்போன் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்றுக்குள் சென்ற செல்போனின் பேட்டரி தனியாக பிரிந்தும் கிடந்துள்ளது. தொடர்ந்து, மருத்துவர்கள் 2 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த செல்போன மற்றும் அதன் பாகங்களை அகற்றியுள்ளனர்.அறுவைசிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் டெல்ஜாகு தனது பேஸ்புக் பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட செல்போனின் புகைப்படங்களையும், அது வயிற்றுக்குள் இருந்த போது எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது; ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த நபர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா கிட்ட கூட வராது - வைரல் வீடியோ!கடந்த 2000ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியோ 3310 என்ற தொலைபேசியை ஒருவர் விழுங்கியதும், அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.No comments:

Post a Comment

Post Top Ad