திருப்பதியில் பக்தர்களுக்கு ஷாக்; ஒட்டுமொத்தமா ரத்து செஞ்ச தேவஸ்தானம்!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். கோயில் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதிகள், கோயில் சொத்துகளை பராமரித்தல், பல்வேறு கோயில்களை நிர்வகிப்பது உள்ளிட்ட விஷயங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
ஏழுமலையானுக்கு பல்வேறு உணவுகள் படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் விளைந்தவற்றைக் கொண்டு தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏழுமலையானுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் ஆனது நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பஞ்சகாவ்யா பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுடன் கைகோர்த்து திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ‘சம்பிரதாய போஜனம்’ என்ற பாரம்பரிய உணவு முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. முன்னதாக சோதனை முயற்சி கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர்
2ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு தொடர்ச்சியாக பக்தர்களுக்கு வர திட்டமிடப்பட்டது.
இதில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் வழங்கப்பட்டது. காலை உணவில் இட்லி, உப்மா, குல்லகர், காலாபாத் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. மதிய உணவில் மில்லட்ஸ், புர்நாலு, தேங்காய் சாதம், புளி சாதம் உள்ளிட்ட 14 வகை உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த சம்பிரதாய போஜனத்தை ‘அமிர்த போஜனம்’ என்று அழைக்கின்றனர். இதன்மூலம் பக்தர்களுக்கு ஆரோக்கியமான
உணவு வழங்குவது உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டது.
No comments:
Post a Comment