ஊரடங்கில் அடுத்த ஷாக்; மாநில அரசுக்கு வல்லுநர்கள் எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

ஊரடங்கில் அடுத்த ஷாக்; மாநில அரசுக்கு வல்லுநர்கள் எச்சரிக்கை!

ஊரடங்கில் அடுத்த ஷாக்; மாநில அரசுக்கு வல்லுநர்கள் எச்சரிக்கை!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பெரிதும் குறைந்திருக்கிறது. தினசரி பாதிப்புகள் 20 ஆயிரத்திற்கும் மேல் காணப்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் படிப்படியாக குறைந்து 1,300க்கும் கீழ் சரிந்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக 1,217 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,198 பேர் குணமடைந்துள்ளனர். 25 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 18,386 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாசிடிவ் விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

தினசரி தொற்றும் மாவட்டங்களில் 1,000க்கும் கீழாக சரிந்துள்ளது. மாநிலத்தின் சராசரி 0.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதையொட்டி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. மறுபுறம் மாதந்தோறும் 2 கோடி என்று இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போது இயல்பு நிலை மீண்டும் திரும்பியுள்ளது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை தொடர்கிறது. இந்த சூழலில் வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது.

சுகாதாரத்துறை எச்சரிக்கை

இதையொட்டி பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டு பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். இதற்கேற்ப சில தளர்வுகளையும் அறிவிக்க மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் தளர்வுகளால் மீண்டும் ஆபத்தான சூழல் வரக்கூடும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை அரசியலாக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

என்ன செய்யப் போகுறது அரசு?

அதாவது விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் வேண்டும் என்கின்றனர். அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் என பலரும் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களிடம் ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஓணம், மொகரம் ஆகிய பண்டிகைகளுக்கு தளர்வுகளை அறிவித்ததன் மூலம் கேரளாவில் எந்தளவிற்கு நோய்த்தொற்று அதிகரித்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாவிடில் நிலைமை விபரீதமாகி விடும் என்று எச்சரித்துள்ளனர். கடந்த திங்கள் அன்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மிகத் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று மாநில கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad