வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை; சம்பளத்தில் மாற்றம்: அமலுக்கு வருகிறது புதிய விதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை; சம்பளத்தில் மாற்றம்: அமலுக்கு வருகிறது புதிய விதி!

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை; சம்பளத்தில் மாற்றம்: அமலுக்கு வருகிறது புதிய விதி!

இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் 6 நாட்கள் வேலை முறை அமலில் உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை செய்து வருகிறார்கள். இதனிடையே, தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019இன்படி, ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. ஊதியக் கூறுகளில் (salary structure) மாற்றம் ஏற்படவுள்ளதால், குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்பட்டாலும், கைகளில் கிடைக்கும் சம்பளத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல்,

வார விடுமுறை நாட்களிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதாவது புதிய ஊதிய விதியின்படி, ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை நிறுவனங்கள் 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான படிகள் என்று சொல்லப்படக் கூடிய அலவன்ஸ்களை 50 சதவீதத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இதனால், அடிப்படை சம்பளம் உயரும் பட்சத்தில், பி.எஃப். பிடித்தம், gratuity என்று சொல்லப்படக்கூடிய பணிக்கொடை உள்ளிட்டவைகள் உயரும், நிறுவனங்கள் ஊழியர்களுக்காக செலுத்தும் பி.எஃப் பங்களிப்புத் தொகையும் அதிகரிக்கும் (இவையும் பெரும்பாலும் salary structureஇன்படி தொழிலாளர்களிடம்தான் பிடிக்கப்படுகின்றன. இந்த பி.எஃப். தொகையும் சேர்த்துத்தான் ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது) என்பதால், ஊழியர்களின் கைகளுக்கு வரும் சம்பளம் குறையும் வாய்ப்புள்ளது.



ஆனால், அவை ஊழியர்களின் ஓய்வுக் காலத்துக்குப் பாதுகாப்பானதாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும், நிறுவனங்களுக்கான செலவும் அதிகமாகும். அதேசமயம், அரசு நிர்வகிக்கும் பி.எஃப் தொகையின் அளவு கணிசமாக உயரும் என்பதால், அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad