ஊரடங்கில் புதிய சலுகை; மாநகராட்சி நிர்வாகம் அசத்தல் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளான மாநிலங்களின் பட்டியலில் 7வது இடத்தில் மேற்குவங்கம் உள்ளது. இங்கு தினசரி தொற்று படிப்படியாக குறைந்து 600க்கும் கீழ் சரிந்துள்ளது. இந்த மாநிலத்தில் நோய்த்தொற்று பதிவான மாவட்டங்களில் 2வது இடத்தில் கொல்கத்தா உள்ளது. இம்மாவட்டத்தில் 3,12,868 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். நேற்றைய தினம் புதிதாக 92 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 77 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,085
பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிய தளர்வுகளை கொல்கத்தா மாநகராட்சி நிர்வாகம் (KMC) அறிவித்துள்ளது.
மாநகராட்சி மகிழ்ச்சி அறிவிப்பு
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கே.எம்.சி பூங்காக்கள் இனிமேல் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். அதேசமயம் காலை 6 மணி முதல் 9 மணி வரையும் திறக்கப்படும். நகரின் பெரிய பூங்காக்களான
சிட்டிசன்ஸ் பூங்கா, எல்லியட் பூங்கா, தேசபந்து பூங்கா, தேசப்பிரிய பூங்கா, பார்க் சர்க்கஸ் மெயிடன் உள்ளிட்டவற்றில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உறுதி செய்வர் என்ற
ு கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு குடிமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வரவேற்பு
பல நாட்களாக மாலை வேளையில் மட்டும் பூங்காக்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. சிலர் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பூங்காக்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகள்
நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து ராவ்டன் தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் அங்கிட் அகர்வால் கூறுகையில், எங்களின் கோரிக்கை இறுதியாக ஏற்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
No comments:
Post a Comment