ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி: பாமக அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி: பாமக அறிவிப்பு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி: பாமக அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்ட மறுசீரமைப்பு காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

இது தொடர்பான வழக்கில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

அதன்படி, மேற்கண்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக

பாமக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று மாலை நடைபெற்றது.


No comments:

Post a Comment

Post Top Ad