கடைசியாக காதலியின் மடியில் தலைவைத்து தூங்கிய நடிகர்: பிரபலங்கள் கண்ணீர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

கடைசியாக காதலியின் மடியில் தலைவைத்து தூங்கிய நடிகர்: பிரபலங்கள் கண்ணீர்

கடைசியாக காதலியின் மடியில் தலைவைத்து தூங்கிய நடிகர்: பிரபலங்கள் கண்ணீர்

சித்தார்த் சுக்லா இறந்தபோது அவரின் காதலியான நடிகை ஷெஹ்னாஸ் கில் உடனிருந்தது தெரிய வந்திருக்கிறது.
இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்த சித்தார்த் சுக்லா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 40. பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். அவரும், நடிகை ஷெஹ்னாஸ் கில்லும் காதலித்து வந்தனர். சித்தார்த்தின் திடீர் மரணத்தால் ஷெஹ்னாஸ் பேரதிர்ச்சியில் இருக்கிறாராம். இந்நிலையில் சித்தார்த் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் வீட்டிற்கு வந்திருக்கிறார் சித்தார்த். வீட்டிற்குள் நுழைந்துதம் தனக்கு ஏதோ மாதிரியாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு அம்மாவும், ஷெஹ்னாஸும் சேர்ந்து லெமன் ஜூஸும், ஐஸ்க்ரீமும் கொடுத்திருக்கிறார்கள். அப்படியும் தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓய்வெடுக்குமாறு அம்மாவும், ஷெஹ்னாஸும் கூறியிருக்கிறார்கள்.
சித்தார்த்தால் தூங்க முடியவில்லை. இதையடுத்து தன் அருகிலேயே இருக்குமாறு ஷெஹ்னாஸிடம் கூறியிருக்கிறார். இரவு 1.30 மணி அளவில் ஷெஹ்னாஸின் மடியில் தலை வைத்து தூங்கியிருக்கிறார் சித்தார்த். இதையடுத்து ஷெஹ்னாஸும் தூங்கிவிட்டார். காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது சித்தார்த் அசையாமல் இருந்திருக்கிறார். எழுப்ப முயன்றபோது கண்ணை திறக்கவில்லை.
சித்தார்த் அசையாமல் இருந்ததை பார்த்த ஷெஹ்னாஸ் பயந்துபோய் அவரின் குடும்பத்தாரை அழைத்திருக்கிறார். அவர்கள் தங்கள் குடும்ப டாக்டரை வரவழைத்தனர். சித்தார்த்தை பரிசோதனை செய்த டாக்டரோ அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்திருக்கிறார். சித்தார்த் இல்லை என்பதை ஏற்க முடியாமல் ஷெஹ்னாஸ் தவிப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad