அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதிய உத்தரவு: பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதிய உத்தரவு: பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதிய உத்தரவு: பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

நியாயவிலைக்கடைகளில் பெண்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களாக பணியமர்த்தப்படுவதற்கான நடைமுறைகளை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுவிநியோக துறையின் கீழ் ரேஷன் அட்டை மற்றும்

நியாயவிலை கடைகள் தொடர்பாக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், பொதுவிநியோகத்திட்டம் - கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் நியாயவிலைக்கடைகளில் பெண்கள் விற்பனையாளர்களாக மற்றும் கட்டுனர்களாக நியமிக்கப்படுதலை குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் முக்கிய கடிதம் ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த கடிதத்தில், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விற்பனையாளர்கள் தற்போது வேலை செய்யும் நியாயவிலைக் கடைகளில் ஒரு உதவியாளரையோ அல்லது கட்டுனரையோ நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த பரிந்துரையில் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் நியமனம் தொடர்பாக இந்த கடிதத்தில் மாற்றுத்திறனாளி பணியாளர்களை இருநபர் பணிபுரிய தகுதியுள்ள கடைகளில் மட்டுமே பணியமர்த்தப்பட்ட வேண்டும் என்றும், ஒருநபர் மட்டுமே பணிபுரிய தகுதியுள்ள நியாயவிலைக்கடைகளுக்கு பணியமர்த்துதல் கூடாது எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நியாயவிலைக்கடைகளுக்கு பெண்கள் பணியமர்த்தப்படும் தேர்வில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற அறிவுத்தப்படுகிறது.

நடைமுறைகள்:

* பெண் பணியாளர்கள் ஆண் பணியாளர்களுக்கு இணையாக பணியமர்த்தப்படலாம், எனினும் அவர்கள் பணியமர்த்தப்படும் நியாயவிலைக்கடைகளில் கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

பெண்கள் நியாயவிலைக்கடைகளில் பணியமர்த்தம் செய்யப்படும்போது மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நியாய விலைக் கடையின் செயல்பாட்டுக்கென லாப நோக்குடன் இருப்பில் வைத்து விநியோகிக்கப்படும் பொது விநியோகத் திட்டத்தினை சாராத கட்டுப்பாடற்ற பொருட்கள் எக்காரணத்தை கொண்டும் கட்டாய விநியோகம் செய்யக்கூடாது. அப்பொருட்கள் அட்டை தாரர் தாமாக முன்வந்து பெற சம்மதிக்கையில் அதனை விதியோகிக்கும் போது அவற்றுக்கென தனியே கடை நடத்தும் நிறுவனத்தின் முறையான அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad