தன்னை தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி! - திருமணம் நடந்தது எப்படி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி! - திருமணம் நடந்தது எப்படி?

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி! - திருமணம் நடந்தது எப்படி?

பிரசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கிரிஸ் கேலரா என்பவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரசில் நாட்டைச் சேர்ந்த 33 வயதான மாடல் அழகியான கிரிஸ் கேலரா, தனது கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் என்ற தீர்மானித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாடல் அழகி கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

திருமணம் குறித்து மாடல் அழகி கிரிஸ் கேலரா கூறியதாவது:


நான் எப்போதும் எனது வாழ்கையில் தனியாக இருக்க பயம் கொள்வேன். ஆனால் தற்போதைய என்னுடைய நிலைமை குறித்து நான் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என நான் உணர்ந்து இருக்கிறேன். அதனை உணர்ந்த நிலையில் அதனை நான் கொண்டாட வேண்டும் என முடிவு செய்து இந்த திருமணத்தை செய்துக் கொண்டேன். என்னை நானே திருமணம் செய்து கொள்வது அற்புதமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad