இது எனது அரசு அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

இது எனது அரசு அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

இது எனது அரசு அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள
பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், மத்திய பண்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பல ஆயிரம் சிந்தனைகளை கொண்டவர் பாரதி. பாரதியின் கவிதை, பாடல்களை மக்களின் மனதிலிருந்து நீக்க முடியாது, பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை” என்றார்.

மேலும் பேசிய அவர், ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும். இது எனது அரசு அல்ல நமது அரசு, பாரதியார் இன்றும் தேவைப்படுகிறார் பாரதி காலத்தின் தேவை என்றார்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், “ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற கவியை பாடி அனைவரும் சமம் என்று சொன்ன பாரதியார் மிக அருமையான புலவர்” என்று பாரதியார் பெருமை குறித்து புகழாரம் சூடினார்.

No comments:

Post a Comment

Post Top Ad