தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தடை செய்யப்பட்டபட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள் என பட்டாசு ஆலைகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உ
ள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, தற்போது வரை தீபாவளிக்கு காலை 1 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் நிபந்தனையுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி நேரம்; மாலை 4 மணி நேரம் என நீட்டித்து வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள் என்று பட்டாசு ஆலைகளுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியது. பெரிய சரவெடிகள் தடை செய்யப்பட்டும் அவை வெடிக்கப்படுவதை பார்க்கிறோம் என்றும் அரசியல் கட்சிகளின் வெற்றி கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் மத நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கின்றன எனவும் அமர்வு தெரிவித்தது.

மேலும் உச்ச நீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என்பதை விளக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. சரவெடி தயாரிப்பதில்லை; சின்ன சின்ன பட்டாசுகளை வாங்கி இணைத்து விடுகிறார்கள் என்று உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது.

300 வகையான பட்டாசுகள் விற்கப்படும் நிலையில், 5 மட்டுமே பசுமை பட்டாசுகள் என மனுதாரர் தரப்பில் தகவல் கூறப்பட்டது. மனுதாரர்கள் தாக்கல் செய்த விவரங்களை பார்த்தால் விதிமீறல் ஏற்படுகிறது என்பதை பார்க்க முடிகிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்படுவதை தடுக்காமல் இருக்கும் காவல் ஆணையர் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிய உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

Post Top Ad