திமுக ஆட்சியில் இதை எதிர்பார்க்காதீங்க: நயினார் நாகேந்திரன்
பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் சந்தி வினாயகர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை
சந்தித்த நயினார் நாகேந்திரன் , “திமுக கூட்டணி கட்சிகள் எண்ணிக்கை அளவில் தான் பலமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர் மக்களின் எண்ணங்கள் என்ன என்பது தெரியவரும். திமுக ஆட்சியில் இருக்கும்போது உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றது கிடையாது. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என எதிர்பார்ப்பது சரியல்ல .கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.
ஓரிரு நாட்களில் எந்தெந்த இடங்களில் போட்டி என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும். டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நிலையில் தசரா போன்ற திருவிழாக்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.
தமிழக அரசு இந்து விரோத
போக்கை கடைபிடித்து வருகிறது. கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது இந்து விரோத போக்கையே காட்டுகிறதுநீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்ட போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் தகுதி தேர்வு என்பது நடைபெற்று வருகிறது. தகுதித்தேர்வை நீக்க முயற்சிக்காமல் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளி பாடத் திட்டத்தை திமுக அரசு மாற்றி அமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment