சீல் இல்லாத சான்றிதழ்: மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன தகவல்!
கொரோனா 2ஆவது அலை காரணமாக 2020- 21ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10,11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகள் ஜூல
ை 19ஆம் தேதி வெளியான நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை ஜூலை 22ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, https://apply1.tndge.org/senior-secondary-regular-provisional-marksheet-10102020 என்ற இணைய முகவரியில் தங்களின் மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாணவர்கள் பதிவிறக்கம் செய்யும் சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாமல் இருந்தது. இதனால், வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேருவதில் சிக்கல் நிலவுவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் 12ஆம் வகுப்பு சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாதது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment