சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: அமைச்சர் உறுதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 17, 2021

சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: அமைச்சர் உறுதி!

சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: அமைச்சர் உறுதி!

முந்தைய காலத்தில் வீட்டிற்கு முன்பு சாணி மொழுகுவது என்பது சுகாதாரமான மற்றும் விஷ கிருமிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால், தற்போது வணிகரீதியில் சாணிபவுடர் விஷமாக மாறியுள்ளது. இந்த சாணிப்பவுடரில் அபாயகரமான ரசாயணப் பொருட்கள் உள்ளன. இதனை கலந்து குடித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சாணி பவுடருக்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் நடைபெற்ற தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் என்பதால் அதுகுறித்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15முதல்16 ஆயிரம் வரையிலான மரணங்கள் ஏற்படுகின்றன. விபத்துக்களினால் 11முதல்12 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்படுகின்றன. தற்கொலை மரணங்கள்தான் அதிகளவில் உள்ளது. அதில் 10-15 சதவிகிதத்தினர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் சாணி பவுடர், பால் டாயில், எலி மருந்து ஆகியவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்” என்றார்.

எனவே, வணிக ரீதியில் சாணிபவுடர் விஷமாக மாறியுள்ளது. அதனால் சாணி பவுடர் தயாரிக்கிற நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மூலம் விரைவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தற்கொலைக்கு இன்னும் சில காரணிகளாக இருக்கக் கூடிய பால் டாயில், எலி மருந்து போன்றவற்றை கடைகளில் விற்பவர்கள் அதை ஒரு லாக்கரில் வைத்து பாதுகாப்பான இடங்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். வெளிப்படையாய் தெரியும்படி விற்பனை செய்யக் கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அப்போது அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad