உள்ளாட்சி தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., வழக்கு!
ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தின் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோதலை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பா்
மாதம் 15 ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து, வேலூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோதல், அக்டோபா் மாதம் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவும், அதைத் தொடா்ந்து அக்டோபா் மாதம் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.
மனுவில், சட்டமன்ற
தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்தக் கூடாது என்றும், இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது, கள்ள ஓட்டு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது
No comments:
Post a Comment