"சார், மேடம்" வார்த்தைகளுக்கு தடை: பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

"சார், மேடம்" வார்த்தைகளுக்கு தடை: பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி!

"சார், மேடம்" வார்த்தைகளுக்கு தடை: பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகம், "சார், மேடம்" என்ற வார்த்தைகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

நாட்டில் எந்தவொரு தனியார், அரசு அலுவலகத்திலும் பணியாற்றும் அதிகாரிகளை, ஆண் என்றால் 'சார்' என்றும், பெண் என்றால் 'மேடம்' என்றும் பொது மக்கள் அழைப்பது வழக்கம். அதைப் போல அங்கு பணிபுரியும் ஊழியர்களும், தங்களுக்குள்ளே இந்த வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நடைமுறையை, முதல் முறையாக மாற்றிக் காட்டி இருக்கிறது, கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம். இந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் யாரும் இந்த வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆளும் இந்த பஞ்சாயத்தில், இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றி உள்ளனர்.

இதன் மூலம் பொது மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையேயான இடைவெளி நீங்கி, இணக்கம் பிறக்கும் என பஞ்சாயத்து துணைத் தலைவர் பிரசாத் கூறியுள்ளார். இனிமேல் பஞ்சாயத்த ு அலுவலகம் செல்லும் யாரும், அங்கே பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பெயர் சொல்லியோ அல்லது அவர்களது பதவியை வைத்தோ அழைத்தால் போதும்.

ஆனால் வயதுக்கு மூத்தவர்களை அப்படி அழைப்பது அசவுகரியமாக தெரிந்தால், 'சேட்டன்' (அண்ணா), 'சேச்சி' (அக்கா) என்று அழைக்கலாம். இதைப் போல 'விண்ணப்ப படிவம்' என்பதற்கு பதிலாக உரிமை சான்றிதழ் என மாற்றம் செய்யவும் பஞ்சாயத்து முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad