அதிமுக ஆட்சியில் வெட்டி விளம்பரமாக அறிவிப்புகள்... புள்ளிவிவரங்களுடன் தாக்கும் நிதியமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

அதிமுக ஆட்சியில் வெட்டி விளம்பரமாக அறிவிப்புகள்... புள்ளிவிவரங்களுடன் தாக்கும் நிதியமைச்சர்!

அதிமுக ஆட்சியில் வெட்டி விளம்பரமாக அறிவிப்புகள்... புள்ளிவிவரங்களுடன் தாக்கும் நிதியமைச்சர்!

கடந்த 2011-21 வரையிலான அதிமுக ஆட்சியில் சட்டபேரவை விதி எண் 110 ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்கள், அவற்றின் நிலை, அதற்கான நிதி ஆகியவை குறித்த முழுமையான அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.


இதை தொடர்ந்த நிதியமைச்சர் பேசும்போது,'கடந்த அதிமுக ஆட்சியில், 110 விதியின் கீழ் 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி மதிப்பிலான 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் 87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான 1,167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது 110 விதியின் கீழ் மொத்த நிதியில் 25 சதவீதத்திற்கும் கீழாகும். மேலும் 537 திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டுள்ளது. 76 ஆயிரத்து 619 கோடி மதிப்பிலான 143 திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி மதிப்பிலான 398 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை.

2013-14 ஆம் ஆண்டு 56 ஆயிரத்து 346 கோடி மதிப்பிலான 292 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இது அந்த நிதியாண்டில் விருப்ப செலவினத்தைவிட 135 சதவீதம் அதிகம். இப்படி அறிவித்தால் எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும்? என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'பொதுமக்கள் அனைவரும் இந்த 110 அறிவிப்புகள் தொடர்பான அறிக்கையை இணையதளத்தில் முழுமையாக படித்து தெரிந்துகொள்ள முடியும். செய்ய முடியாத சாத்தியமாகாத பல திட்டங்களை அறிவித்துவிட்டு, பின்னர் அதை ஆய்வு செய்யும்போது சாத்தியக்கூறுகள் இல்லை என பல திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. வெட்டி விளம்பரமாக 110 விதியின்கீழ் அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 
அரசுப் பணிகளில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அறிவிப்புகள், முழுமையாக அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும். ஆக.14 முதல் 31ம் தேதிக்குள் 35 லட்சம் லிட்டர் பெட்ரோல் நாளொன்றுக்கு அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.

கடந்த ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பிடும்போது அரசின் உள்கட்டமைப்பு 10 ஆண்டுகள் பின்னோக்கி உள்ளன' என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad