பாஸ்போர்ட் கிடைச்சாச்சு; உடனே கிளம்பிய பிரேமலதா விஜயகாந்த்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

பாஸ்போர்ட் கிடைச்சாச்சு; உடனே கிளம்பிய பிரேமலதா விஜயகாந்த்!

பாஸ்போர்ட் கிடைச்சாச்சு; உடனே கிளம்பிய பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை விஜயகாந்த் தவிர்த்தார்.

துபாய் சென்ற விஜயகாந்த்

அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்த சூழலில் மேல் சிகிச்சைக்காக துபாய் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை சென்னை விமான நிலையத்திற்கு விஜயகாந்த் வருகை புரிந்தார். அப்போது அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து விஜயகாந்தை வேகமாக தள்ளிக் கொண்டே விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது தொண்டர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பாஸ்போர்ட் முடக்கத்தால் அவதி

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியனும் உடன் சென்றார். இந்த சூழலில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஏன் செல்லவில்லை என்று கேள்வி எழுந்தது. இதுபற்றி விசாரிக்கையில், 2017ஆம் ஆண்டு திருநெல்வேலியில் தொடரப்பட்ட குற்ற வழக்கை பிரேமலதா மறைத்துவிட்டதாக கூறி அவரது பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட அதிகாரி வாங்கி வைத்துக் கொண்டது தெரியவந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமலதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad