சர்ப்ரைஸ் அறிவிப்புகள்; முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

சர்ப்ரைஸ் அறிவிப்புகள்; முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்!

சர்ப்ரைஸ் அறிவிப்புகள்; முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவரும், ஆங்கிலேயர்களால் மிகக் கொடிய தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவரும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தான். ஆங்கிலேயர்களின் வணிகத்தையும், பொருளாதாரத்தையும் அழித்து அவர்களை இந்தியாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி ஆங்கிலேயர்களை மிரள வைத்தவர். ஆங்கிலேயர்களின் சதித் திட்டங்களாலும், ஒடுக்குமுறையாலும் தமது சொத்துகளையெல்லாம் இழந்து பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதற்குக் கூட பண வசதியில்லாமல் வறுமையில் வாடியவர். வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்களுக்காக அவருக்கு நாம் உரிய அங்கீகாரத்தையும்,

ஓராண்டு கொண்டாட்டம்


நன்றிக் கடனையும் செலுத்தவில்லை. அந்தக் குறையை தமிழக அரசு போக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் நூற்றி ஐம்பதாவது ஆண்டு, நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் நிலையில், அதை ஓராண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். அவருக்கு உருவச்சிலை, பல்கலைக்கழகம் மற்றும் கப்பலுக்கு அவரது பெயரை சூட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 15-ஆம் நாள், விடுதலை நாளையொட்டி வெளியிட்ட அறிக்கையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியிருந்தேன்.

வ.உ.சிக்கு பெருமை

இத்தகைய சூழலில் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை போற்றும் மக்கள் அனைவருக்கும் இது ஆனந்தத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும். அதேபோல், அயோத்திதாச பண்டிதரின் 175-ஆவது பிறந்தநாளை போற்றும் வகையில் அவருக்கு வட சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பும் அவரையும், தமிழையும் போற்றும் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை அளிக்கும்.


No comments:

Post a Comment

Post Top Ad