தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி...பாஜக மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகிரங்க குற்றச்சாட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி...பாஜக மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகிரங்க குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி...பாஜக மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகிரங்க குற்றச்சாட்டு!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடைவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்‌ செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'கொரோனா பரவலை கருத்தில்‌ கொண்டு இந்த ஆண்டு விநாயகர்‌ சதுர்த்தி ஊர்வலம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் வீடுகளில்‌ விநாயகர்‌ சிலைகளை வைத்து வழிபட்டு, அதனை அருகில்‌ உள்ள நீர்நிலைகளில்‌ கரைக்க தனிநபர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. விநாயகர்‌ சதுர்த்தி ஊர்வலங்களுக்கு மட்டுமின்றி அனைத்து மத வழிபாடுகளுக்கும்‌ கட்டுப்பாடுகள்‌ விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காலத்தில்‌ பொதுமக்கள் பெருமளவு கூடும்‌ மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம்‌ என ஒன்றிய அரசும்‌ மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில்‌, 'விநாயகர்‌ சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதிப்பதை ஏற்க இயலாது; தடையை மீறுவோம்‌' என தமிழக பாஜக தலைவர்‌ அண்ணாமலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும்‌ தடையை ஏற்க முடியாது என்றும்‌, பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச்‌ செல்வோம்‌ என்றும்‌ பகிரங்கமாக அறிவித்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவை பயன்படுத்தி தேவையற்ற சட்டம் -‌ ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும்‌ நோக்கத்துடனே இதுபோன்ற மிரட்டல்களை பாஜக விடுத்துள்ளது.‌

அமைதியான முறையில் நடைபெற்று வந்த விநாயகர்‌ சதுர்த்தி ஊர்வலத்தை கலவரமாக மாற்றியவர்கள்‌ இவர்களே. கொரோனா நோய்த்தொற்று காலத்திலும்‌ கூட தங்கள்‌ கலவரத்‌ திட்டங்களை கைவிட பாஜக, இந்து முன்னணி தயாராக இல்லை.

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த அறிவிப்பை தமிழக அரசு உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்‌; கவவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலான பாஜக‌வின் அறிவிப்பை தமிழக மக்கள்‌ மொத்தமாய் புறக்கணிக்க வேண்டும். பாஜக ஆளும்‌ மாநிலங்களிலும்‌ விநாயகர்‌ சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று கே.பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad