பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்; திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்; திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு!

பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்; திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு!

தமிழகத்தில்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 9-12ஆம் வகுப்பினருக்கு மட்டும் ஒரு வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் வீதம் சுழற்சி முறையில் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கக் கூடும். எனவே பள்ளி சூழலுக்கு ஏற்ப அவர்களை தயார்படுத்த, முதல் 45 நாட்கள் புத்துணர்வு வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்

பள்ளிகள் திறப்பிற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களும் கட்டாய

தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக எல்லையோர மாவட்ட பள்ளிகளுக்கு கேரளாவில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவரும் கோவிட்-19 நெகடிவ் சான்று,

கேரளாவில் இருந்து வருகை

இரு தடுப்பூசி போட்டதற்கான சான்று உள்ளிட்டவை அவசியம் என பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக - கேரள எல்லையான பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் பலர் எந்தவித பரிசோதனை சான்றும் இல்லாமல் வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையறிந்த அதிகாரிகள், கேரளாவில் இருந்து வரும் ஆசிரியர்கள் கொரோனா

பரிசோதனை சான்று கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்

No comments:

Post a Comment

Post Top Ad