சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்; சும்மா வெளுத்து வாங்கிருச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்; சும்மா வெளுத்து வாங்கிருச்சு!

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்; சும்மா வெளுத்து வாங்கிருச்சு!

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஜூன் ஒன்று மூதல் செப்டம்பர் ஒன்று வரையிலான காலகட்டத்தில் சென்னையில் அதிகப்படியான மழை பெய்திருப்பதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்து வரவுள்ள வடகிழக்கு பருவமழையின் தேவை பெரிதாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி, சென்னையில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 1 வரையிலான காலகட்டத்தில் 465.8 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது.

பருவமழை நிலவரம்

வழக்கமாக 321.1 மில்லிமீட்டர் அளவு மட்டுமே மழை பெய்யும் சூழலில், இம்முறை 144.7 மில்லிமீட்டர் அளவிற்கு அதிகப்படியான மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் நகரின் தெற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 384.8 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. வழக்கமாக 355.4 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்து வரும் சூழலில், தற்போது 29.4 மில்லிமீட்டர் அதிகப்படியாக பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 440 மில்லிமீட்டர் மழையும்,

மீனம்பாக்கம் பகுதியில் 480 மில்லிமீட்டர் மழையும் பெய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

சராசரி எவ்வளவு?

ஓராண்டில் சென்னையின் சராசரி மழைப்பொழிவு 1,383.9 மில்லிமீட்டர் ஆகும். ஜூன் - செப்டம்பர் பருவமழை காலத்தில் 431 மில்லிமீட்டரும், அக்டோபர் - டிசம்பர் பருவமழை காலத்தில் 867.4 மில்லிமீட்டரும் மழை பெய்யும். நடப்பாண்டில் ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து சென்னை துணை மண்டலத்தில் 335.2 மில்லிமீட்டர் பெய்ய வேண்டிய மழை 13 சதவீதம் அதிகரித்து 379.2 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் வழக்கமாக 336.4 மில்லிமீட்டர் மழை பெய்யும் நிலையில், 14 சதவீதம் உயர்ந்து 383.6 மில்லிமீட்டராக பெய்திருக்கிறது.

நல்ல மழைக்கு வாய்ப்பு

சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் திருவள்ளூரில் தான் அமைந்திருக்கின்றன. இங்கு வழக்கமாக 325.4 மில்லிமீட்டர் பெய்ய வேண்டிய மழை, 43 சதவீதம் அதிகரித்து 466.7 மில்லிமீட்டராக பெய்துள்ளது. இதேபோல் செங்கல்பட்டில் 325.4 மில்லிமீட்டர் பெய்ய வேண்டிய மழை 9 சதவீதம் குறைந்து 296.2 மில்லிமீட்டர் மட்டுமே பெய்திருக்கிறது. பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்

நா.புவியரசன் கூறுகையில், நடப்பு தென்மேற்கு பருவமழை காலம் தமிழகத்தில் சற்று வலுகுறைந்த ு தான் காணப்பட்டது.

கடந்த ஆண்டு கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. ஆனால் நடப்பு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கேரளாவில் மழை பற்றாக்குறையாகத் தான் பெய்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திலும் சொல்லிக் கொள்ளும்படி மழை பெய்யவில்லை. இதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்தது. அடுத்து வரும் நாட்களில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழைக்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad