யார் இந்த சுப்ரியா சாஹூ? கூடுதல் பொறுப்பை ஒப்படைத்த தமிழக அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

யார் இந்த சுப்ரியா சாஹூ? கூடுதல் பொறுப்பை ஒப்படைத்த தமிழக அரசு!

யார் இந்த சுப்ரியா சாஹூ? கூடுதல் பொறுப்பை ஒப்படைத்த தமிழக அரசு!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்தவர் வெங்கடாச்சலம். இவர் மீது பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். சென்னை கிண்டியில் இருக்கும் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், வேளச்சேரி அலுவலகம், புதிய தலைமை செயலக காலனி, 2வது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு, சேலம் அம்மம்பாளையத்தில் உள்ள வீடு மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

சிக்க வைத்த ஊழல் விவகாரம்

அதில், கணக்கில் வராத 13.50 லட்ச ரூபாய், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தன மரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் கண்டறியப்பட்டது. ஓய்வு பெற இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் ஊழல் வழக்கில் வெங்கடாச்சலம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து வெங்கடாச்சலத்தை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சுப்ரியா சாஹு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில் சுப்ரியா சாஹூவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த சுப்ரியா சாஹூ?

1991ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர் சுப்ரியா சாஹூ. மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் வேலூர் மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராகவும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். ஜூலை 2016 முதல் செப்டம்பர் 2017 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பொது இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

இயற்கையை மீது ஆர்வம்

ஆசிய பசுபிக் ஒளிபரப்புத்துறை யூனியனின் (ABU) துணைத்தலைவராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். பின்னர் இதன் செயல் தலைவராகவும் பதவி வகித்தார். தற்போது INDCOSERVE சி.இ.ஓவாக பணியாற்றி வருகிறார். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad