எந்த ஊர்களுக்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

எந்த ஊர்களுக்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

எந்த ஊர்களுக்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்று முதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 13ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவலா (நீலகிரி) 16, பந்தலூர் (நீலகிரி) 8, மேல் கூடலூர் (நீலகிரி) 5, கூடலூர் பஜார் (நீலகிரி) 4,பிறையார் எஸ்டேட் (நீலகிரி) 3, சேலம் (சேலம்), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 2, சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை), பெரியாறு (தேனி), அவலாஞ்சி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்

இன்று முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 12, 13ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad