மீண்டும் சோகம்; ஆன்லைன் ரம்மிக்கு எப்போது தான் தடை சட்டம் வரும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

மீண்டும் சோகம்; ஆன்லைன் ரம்மிக்கு எப்போது தான் தடை சட்டம் வரும்?

மீண்டும் சோகம்; ஆன்லைன் ரம்மிக்கு எப்போது தான் தடை சட்டம் வரும்?

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற 24 வயது இளம் ஆயுதப்படை காவலர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 4-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார். நல்வாய்ப்பாக துப்பாக்கி குண்டு அவரது மூளையை தாக்காததால் உயிர் பிழைத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவருகிறார். அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்

தமிழகத்தில் மீண்டும் துயரம்

அவர் ரூ.7 லட்சம் அளவுக்கு கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாகவும், அதை தாங்கிக் கொள்ள முடியாததால் தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. எந்த சோகம் நடக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் நினைத்ததோ அந்த சோகம் நடந்திருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டோபஸின் கொடுங்கரங்களுக்குள் சிக்கிய வேலுச்சாமி என்ற இளம் காவலர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். அவர் விரைவில் உடல் நலம் தேற விழைகிறேன்.

சூதாட்ட தடை சட்டம் வேண்டும்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழும் 2-வது விரும்பத்தகாத சம்பவம் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் 20-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், சேர்ந்தனூர் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் என்ற இளம் தந்தை லட்சக்கணக்கான ரூபாயை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தமது மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்போது காவலர் வேலுச்சாமி கொடூரமான முறையில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad