திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? கனிமொழி சொன்ன காரணம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? கனிமொழி சொன்ன காரணம்!

திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? கனிமொழி சொன்ன காரணம்!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்டிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திமுக எம்.பி.கனிமொழி பிரச்சாரம் மேற்கொளிறார்.


ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது

அதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, “உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர்கள். தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக உள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தபோது, கரோனா பிடியில் தமிழகம் மோசமாக சிக்கியிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை இருந்தது. அதில் இருந்து விடுவித்து தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக உருவாக்கியது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியில் கரோனா காலத்தில் முழு ஊரடங்கால் மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது திமுக அரசு. பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதியை தமிழக முதல்வர் கொண்டுவந்தார்.

பெண்கள் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கியவர் கலைஞர். பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவர் கலைஞர். இலவச சமையல் அடுப்பும் வழங்கினார். கலைஞர் வழியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆட்சிக்கு வந்த 4 மாதத்துக்குள் ஆலங்குளத்தில் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ. 11 கோடி ஒதுக்கியது திமுக அரசு. கடையம் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் ஒரு கல்லூரி அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் தேவைகள் எல்லாவற்றையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad