தமிழகத்தில் ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிப்பு; யாருக்கு வெற்றி வாய்ப்பு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

தமிழகத்தில் ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிப்பு; யாருக்கு வெற்றி வாய்ப்பு?

தமிழகத்தில் ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிப்பு; யாருக்கு வெற்றி வாய்ப்பு?

தமிழகத்தில் இருந்து அதிமுக  சார்பில் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜ்ய சபா எம்.பிக்களாக தேர்வாகி இருந்தனர். இவர்களின் பதவிக்காலங்கள் முறைய ே 02.04.2026 மற்றும் 29.06.2022 ஆகிய தேதி வரை இருந்தது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் இருவரும் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றனர். இரண்டு பதவிகளை பெற்றிருந்த காரணத்தால் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். அதன்படி, இருவரும் தங்களது ராஜ்ய சபா சீட்களை கடந்த மே 7ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தனர்.

காலியான இடங்கள்

இதையடுத்து இரண்டு இடங்களும் காலியாகின. இவற்றுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கனவே அதிமுக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த அ.முகமது ஜான் அவர்கள், உடல்நலக் குறைவால் கடந்த மார்ச் 23ஆம் தேதி காலமானார். எனவே காலியான மூன்று இடங்களுக்கும் ஒரே நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.முகமது ஜான் இடத்திற்கு மட்டும் தனியாக

தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக பெரும்பான்மை பெற்றிருந்ததால் பிற கட்சிகள் யாரும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

தேர்தல் தேதி அறிவிப்பு

இந்த சூழலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி ராஜ்ய சபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ராஜ்ய சபாவில் திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்றைய தினம் எஞ்சியுள்ள இரண்டு ராஜ்ய சபா இடங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நடைபெறும். வேட்புமனு பரிசீலனை 23ஆம் தேதி நடத்தப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 27 ஆகும்.

No comments:

Post a Comment

Post Top Ad