தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்: ஸ்டாலின் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்: ஸ்டாலின் அறிவிப்பு!

தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்: ஸ்டாலின் அறிவிப்பு!

இந்திய துணை கண்டத்தில் வரலாறு தமிழ் நிலபரப்பிலிருந்து தான் துவங்கி எழுதபட வேண்டும் என கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
“வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். தமிழினத்தின் பெருமையை பறைசாற்றும் அறிவிப்பாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
திமுக ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் தமிழ் அரசினை நடத்தியது. திரும்பிய பக்கமெல்லாம் திருக்குறளை தீட்டியது, பூம்புகார் கோட்டம் அமைத்தது, தமிழை கணினி மொழி ஆக்கியது, தமிழாசிரியர்களை தலைமையாசிரியராக்கியது.

பண்டைய நாகரீகத்தினர் தமிழன் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன. இதை யாராலும் அசைக்கவோ மறுக்கவோ முடியாது.

சிவகங்கை கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. வியக்க வைக்கும் செங்கல் கட்டுமானம் , தங்க அணிகலன்கள் , சிந்துவெளி நாகரீகத்தில் காணபட்ட காளைகள், கருப்பு சிவப்பு பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கார்பன் ஆய்வின் முடிவில் படி கி.மு ஆறாம் நூற்றாண்டிலே எழுத்தறிவு பெற்ற இனமாக தமிழினம் விளங்கி உள்ளது. கீழடி கொற்கை சிவகளை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. கீழடி நாகரீகம் கி.மு 6 ஆம் நூற்றாண்டை சார்ந்தது.



கி.மு.8 ம் நூற்றாண்டுக்கு முன்னதாக கொற்கை ஒரு துறைமுகமாக செயல்பட்டுள்ளது. வெளிநாடுகளுடன் வணிக தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூருக்கு அருகில் கண்டறியப்பட்ட நெல்மணிகள் அமெரிக்காவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டத்தில் நெல் மணிகளின் காலம் கிமு 1155 என கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad