செவ்வாய் கிரகத்தில் ஓயாமல் உழைக்கும் இன்ஜெனூட்டி - நாசா பெருமிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

செவ்வாய் கிரகத்தில் ஓயாமல் உழைக்கும் இன்ஜெனூட்டி - நாசா பெருமிதம்!

செவ்வாய் கிரகத்தில் ஓயாமல் உழைக்கும் இன்ஜெனூட்டி - நாசா பெருமிதம்!

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட சிறிய ரக ஹெலிகாப்டர் இன்ஜெனூட்டி ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பதாக நாசா பெருமிதம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பேர்சவரன்ஸ் ரோவர்-ஐ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் தகவல்களை சேகரிக்க இந்த ரோவர் சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்டது. இதனுடன் இன்ஜெனூட்டி என்கிற சிறிய ரக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பல மாதங்களாக 12 சுற்றுகள் பறந்து விட்ட நிலையில் இதற்கு ஓய்வு கொடுக்க நாசா விஞ்ஞானிகள் எண்ணினர். ஆனால், பேர்சவேரன்ஸ் ரோவரைத் தொடர்ந்து படம் பிடித்து வரும் இந்த ஹெலிகாப்டர் இன்னும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் ஐந்து முறை இந்த ஹெலிகாப்டர் பறந்தாலே போதும் என்று விஞ்ஞானிகள் எண்ணிய நிலையில் இந்த ஹெலிகாப்டர் இன்னும் பறந்து கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம். பூமிக்கு மேலே 30 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறக்க விட்டால் எவ்வளவு காற்றழுத்தம் இருக்குமோ அதே அளவு அழுத்தம் செவ்வாய் கிரகத்தின் பரப்பில் உள்ளது.



ஆனாலும் இந்த அதீத காற்றழுத்தத்தை தாங்கிக் கொண்டு இன்ஜெனூட்டி பறந்து வருகிறது. வெறும் 1.8 கிலோ எடை கொண்ட இந்த சிறிய ரக ஹெலிகாப்டர் சோலார் பேனல்கள் உதவியுடன் சூரிய ஒளி கொண்டு தனது பேட்டரியை சார்ஜ் செய்து கொள்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad