திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம்; இப்படியொரு ஷாக் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம்; இப்படியொரு ஷாக் தகவல்!

 திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம்; இப்படியொரு ஷாக் தகவல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருக்கின்றனர். இவர்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. வேறெங்கும் கிடைக்காத வகையில் பிரத்யேகமான பதார்த்தங்களை கொண்டு திருமலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த பல மாதங்களாக பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலை படிப்படியாக தணிந்து வருவதால், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. தினசரி 18 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதையொட்டி ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையில் பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி தொலைபேசி வாயிலாக நடைபெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகளைக் கூறினர். சில விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad