இன்று முழு ஊரடங்கு அமல்; மீண்டும் முடக்க தயாராகும் மாநில அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

இன்று முழு ஊரடங்கு அமல்; மீண்டும் முடக்க தயாராகும் மாநில அரசு!

இன்று முழு ஊரடங்கு அமல்; மீண்டும் முடக்க தயாராகும் மாநில அரசு!

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. தினசரி பாதிப்புகளில் நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்யும் மாநிலமாக காணப்படுகிறது. நேற்று புதிதாக 29,682 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 142 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 2,50,097 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாசிடிவ் விகிதம் 17.54 சதவீதமாக காணப்படுகிறது.



கடும் கட்டுப்பாடுகள்

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர், ஓணம் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து பெரிய அளவில் கொரோனா பாதிப்புகள் இல்லை.


கொரோனா பாதிப்பு நிலவரம்

கடந்த ஒரு வாரத்தை ஒப்பிடுகையில் அதற்கு முந்தைய இரு வாரங்களை விட குறைவான எண்ணிக்கையில் தான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 14-20 காலகட்டத்தில் 1,77,935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5.99 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 3 வரையிலான காலகட்டத்தில் 2,23,197 பேர் வைரஸ் பரவலுக்கு ஆளாகியிருந்தனர். அதில் 5.23 சதவீதம் பேர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad