ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம் மருதாநதி அணை பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. அத்துடன் பயனர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். அய்யம்பாளையும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிய
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “அணையில் தண்ணீர் திறந்துவைக்க வரும்போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம், இந்த அணை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அவரால் கட்டப்பட்டது.

இருபது வருடத்தில் முதன்முறையாக முதல் போக நெல் விவசாயத்திற்கு இப்போதுதான் தண்ணீர் சரியான காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், விவசாயிகளின் நலன் காக்கும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிந்துள்ள புதிய விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்க உத்தரவிட்டதால், தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கினோம். இதன்மூலம் 40% விவசாயிகள் அதிகரித்துள்ளனர். தமிழகத்தில் விவசாய தொழில் அழிந்துவரும் நிலையில், அதைப் பாதுகாக்கும் வண்ணமாக தமிழக முதல்வர் கொடுத்த பணம் கை கொடுத்துள்ளது.

இங்கு மருதாநதி அணை பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது கேட்டு மனு கொடுத்துள்ளார்கள். விரைவில் குறை தீர்க்கப்படும். இதுபோல மலை கிராமமான புல்லாவெளி பகுதியிலும் பகுதிநேர ரேஷன் கடை கேட்டுள்ளார்கள். விரைவில் அப்பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்படும். மருதாநதி அணை அருகிலுள்ள ஏ.கே.ஜி நகர் பகுதி மக்களுக்கு சாலை வசதி, மயான வசதி கேட்டுள்ளார்கள். ஒருமாத காலத்தில் அவர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad