வெரிகுட்... மோசம்... மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!
தமிழகம் முழுவதும் கடந்த 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மாவட்டவாரியாக எவ்வளவு சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மதிப்பீட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.
தமது கடிதத்தில், ' நாம் எவ்வளவு கடுமையான முயற்சிகளை எடுத்தாலும்
முக்கியமான மாநிலங்களின் வரிசையில் கொரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் 13 வது இடத்திலேயே தொடர்கிறது.தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை அடைய வேண்டும் என்ற இலக்குடன் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மெகா முகாமுடன் சேர்த்து இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி,, திருப்பூர் மாவட்டங்கள், 'எக்சலென்ட்' ஆக உள்ளன.
,செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், ஈரோடு கரூர், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்கள், 'வெரிகுட்' என்று சொல்லும்படியும், , மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலுார், ராமநாதபுரம்
ஆகிய மாவட்டங்களில் 'முன்னேற்றம் தேவை'ப்படும் நிலையிலும் (need an improvement) இருக்கின்றன.
அதேசமயம் திருப்பத்துார், ராணிப்பேட்டை, அரியலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மோசம் என்றும் தமது கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment