ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் வைத்த கோரிக்கை: தள்ளிப்போன விசாரணை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் வைத்த கோரிக்கை: தள்ளிப்போன விசாரணை!

ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் வைத்த கோரிக்கை: தள்ளிப்போன விசாரணை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, மக்களின் உடன் நலத்தை சிதைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆலையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பின் ஆலை இழுத்து மூடப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிய போது சிகிச்சைக்காக ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் உற்பத்திக்கு நிறுவனம் அனுமதி கோரிய நிலையில் தமிழ்நாடு அரசு அனுமதித்தது.

இந்நிலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் மனு செய்திருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், ''மருத்துவ அவசர நிலை காரணத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது. மூலப்பொருட்களை அகற்றிக் கொள்ள அனுமதி கோரியது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்புக்குழு ஒப்புதல் தர பரிந்துரைக்கவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதிக்கவில்லை. இந்த சூழலில், கழிவுகள் மற்றும் மூலப்பொருட்களை அகற்றிக் கொள்ள அனுமதிக்க முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad