குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த், அகல்யா தம்பதிக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரி சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வசந்த், அகல்யா தம்பதிக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வருண், இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ள செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்தக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான 2.50 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad