செஞ்சுரியை தாண்டிருச்சு; பெங்களூருவிற்கு இப்படியொரு சிறப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

செஞ்சுரியை தாண்டிருச்சு; பெங்களூருவிற்கு இப்படியொரு சிறப்பு!

 செஞ்சுரியை தாண்டிருச்சு; பெங்களூருவிற்கு இப்படியொரு சிறப்பு!

கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கல்வியாளர்கள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூசனை சேர்ந்த
ஷாமிகா ரவி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தை சேர்ந்த முடித் கபூர் ஆகியோர் ஆவர். இந்த ஆய்வில் இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசும் மாவட்டமாக கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு விளங்குவது தெரியவந்துள்ளது. இங்கு மட்டும் 107 மொழிகள் பேசப்படுகின்றன. அதில் 22 பழங்குடியின மொழிகள், 84 பழங்குடியின அல்லாத மொழிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை மொழிகள் தெரியுமா?

பெங்களூருவில் 44 சதவீதம் பேர் கன்னடம், 15 சதவீதம் பேர் தமிழ், 14 சதவீதம் பேர் தெலுங்கு, 12 சதவீதம் பேர் உருது, 6 சதவீதம் பேர் இந்தி, 3 சதவீதம் பேர் மலையாளம், 2 சதவீதம் பேர் மராத்தி, 0.6 சதவீதம் பேர் கொங்கனி, 0.6 சதவீதம் பேர் பெங்காலி, 0.5 சதவீதம் பேர் ஒடியா மொழிகளை பேசுகின்றனர். மேலும் பொச்சூரி, கொந்த், சங்தம், வாங்சோ ஆகிய மொழிகளை மிகக் குறைந்த அளவில் பேசும் நபர்கள் வசிக்கின்றனர்.

உலகிலேயே உச்சம் இதுதான்

இருப்பினும் உலக அளவில் பார்க்கும் போது நியூயார்க்கில் 600க்கும் அதிகமான மொழிகள் பேசுபவர்கள் வசிப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக 100க்கும் அதிகமான மொழிகள் பேசப்படும் இந்திய மாவட்டங்களாக திமாபூர் (நாகாலாந்து) 103 மொழிகளும், சோனித்பூர் (அசாம்) 101 மொழிகளும் பேசப்படுவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறைவான மொழிகள் பேசும் மாவட்டங்களாக யாணம் (புதுச்சேரி), கைமூர் (பபூவா, பிகார்),

மொழிகளின் இடம்பெயர்வு

கவுஷாம்பி மற்றும் கான்பூர் தேஹத் (உத்தரப் பிரதேசம்), அரியலூர் (தமிழ்நாடு) ஆகியவை உள்ளன. இங்கு 20க்கும் குறைவான மொழிகளே பேசப்படுகின்றன. இந்த ஆய்வு தொடர்பாக பேசிய ஷாமிகா ரவி, எவ்வளவு பேர் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாமல் எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து ஆய்வு செய்யப்பட்டது. பொருளாதார நோக்கத்திற்காக பல்வேறு மொழி பேசும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad