நாக்பூர் கல்விக் கொள்கை: கர்நாடகா காங்கிரஸ் கடும் சாடல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

நாக்பூர் கல்விக் கொள்கை: கர்நாடகா காங்கிரஸ் கடும் சாடல்

நாக்பூர் கல்விக் கொள்கை: கர்நாடகா காங்கிரஸ் கடும் சாடல்

இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த கமிட்டியானது தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் சமர்ப்பித்தது.



இந்த வரைவு திட்டத்தின் மீதான கருத்துக்கேட்பு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், ஏராளமான கல்வியாளர்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருந்த அம்சங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இணையத்தளத்தில் வெளியிட்டது.

தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நடப்பாண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தேசிய கல்விக் கொள்கை 2020-யை அமல்படுத்த கர்நாடக மாநில ஆளும் பாஜக அரசு உத்தரவிட்டது.

இதுபோன்ற உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா திகழும் நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad